செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:36 IST)

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

ஏற்கனவே ரஜினி, விஜய் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் நேற்று தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது
 
இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளப்பிய நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்
 
அவர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காணம் என்ற பகுதியில் புவனேஷ் என்பவர் தான் இந்த மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
அதுமட்டுமன்றி இதே நபர் தான் கடந்த வாரம் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த மரக்காணம் போலீசார் நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பதும் நீலாங்கரை போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது