வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:04 IST)

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பயோபிக் வருமா? போனி கபூரின் பதில் இதுதான்!

கடந்த சில வருடங்களாக மறைந்த மற்றும் உயிரோடு இருக்கும் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்களின் பயோபிக் திரைப்படங்கள் இந்தியில் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் விரைவில் சாவர்க்கர் மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் பயோபிக் ரிலீஸாகவுள்ளது.

தமிழில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப்படம் உருவாக உள்ளது. அதில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பயோபிக் திரைப்படம் உருவாகுமா என்ற கேள்விக்கு அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் பதிலளித்துள்ளார்.

அதில் “ஸ்ரீதேவி எப்போதும் தன்னுடைய சொந்த வாழ்க்கையை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு செல்லாதவர். அதனால் அவர் வாழ்க்கை வரலாறு படமாக வாய்ப்பில்லை. நான் உயிரோடு இருக்கும் வரை அதற்கு சம்மதிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார். ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நட்சத்திர ஓட்டலில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.