1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:53 IST)

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது கணவர்   நேர்கொண்ட பார்வை, துணிவு உள்ளிட்ட பல படங்களை தயாரித்த போனிகபூர். இந்த தம்பதிகளுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள்.

இதில் ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் தங்கையான குஷி கபூர் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவனின் உதவியாளர் ஆகாஷ் என்பவர் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.  இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது.  விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.