ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா? தந்தை போனி கபூர் கொடுத்த அப்டேட்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதல்வரின் பேரனுமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக பாலிவுட்டில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் ஜான்வியின் தந்தையான போனி கபூர் ஜான்வி காதல் பற்றி பேசியுள்ளார். அதில் “இப்போதுள்ள இளைஞர்கள் நம்மை விட வேகமாக உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாமே தெரிகிறது. என் மகள்கள் என்னோடு இருந்தால் எனக்கு உலகமே என்னோடு இருப்பதாக தோன்றுகிறது. என் மகள்களைப் போலவே எனக்கு ஷிகரும் முக்கியமானவர். அவரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர்கள் காதலுக்கு எந்த தடையும் இருக்காது. விரைவில் இதுகுறித்து பெரியவர்களிடம் பேச உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.