1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:34 IST)

பேட்ட படத்துக்கு பின் புதிய படத்தில் நடிக்கும் ரஜினி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில். பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட  வடமாநிலங்களில் 3 மாதங்களாக நடந்து வருகிறது.

அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடியும் என்றும், அதன்பிறகு அரசியல் பணிகளில் ரஜினி காந்த்  முழுமையாக ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் புதிய படமொன்றில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க  உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அரசியல் கட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.