1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூன் 2020 (07:18 IST)

அமெரிக்காவில் ஒரே நாளில் 809 பேர் உயிரிழப்பு: உலக அளவில் எவ்வளவு?

அமெரிக்காவில் ஒரே நாளில் 809 பேர் உயிரிழப்பு
உலகிலேயே கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 26,065 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,34,465 ஆக அதிகரிப்பு என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,19,941 ஆக உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த 960,309 என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 46,665 என்றும் தகவல் வெளி வந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த 553,301என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 7,478 என்றும் தகவல் வெளி வந்துள்ளது. நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த 367,264என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 12,262 என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 299,251 என்பதும், ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 291,763 என்பதும், பெருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240,908என்பதும், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237,828 என்பதும், ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195,051 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,398,683 என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 119,941 என்பதும் குறிப்பிடத்தக்கது