திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (15:50 IST)

பெண் குழந்தைக்கு தாயானார் செரினா வில்லியம்ஸ்...

டென்னீஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.


 

 
உலகப்புகழ்பெற்ற டென்னீஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், கர்ப்பமாக இருந்தார். ஆனாலும், சில விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர் விளையாடி வந்தார்.
 
அந்நிலையில் புளோரிடாவில் உள்ல வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அவர் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்நிலையில், அவர் அங்கு அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரின் பயிற்சியாளர் பாட்ரி மவுரடொக்ளோ தனது டிவிட்டர் பக்கத்தில் “செரினாவுக்கு என் வாழ்த்துக்கள். பெண் குழந்தையை பெற்றுத்துள்ளீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. விரைவில் மீண்டும் நீங்கள் விளையாட வர வேண்டும் என விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், விளையாட்டுத் துறையை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.