அல்லு அர்ஜுனை சந்திக்க தனி விமானத்தில் சென்ற ஷாருக் கான்?
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.
இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் பதான் படத்தின் ப்ரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் ஜவான் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை அணுகி, அட்லி பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தில் நடிப்பது சம்மந்தமாக பேச அட்லி மற்றும் ஷாருக் கான் ஆகிய இருவரும் தனி விமானத்தில் சென்று அல்லு அர்ஜுனை சந்தித்து பேசியுள்ளார்களாம். ஷாருக் கானே நேரில் வந்ததால் அல்லு அர்ஜுன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.