வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (20:53 IST)

இந்தியன் 2’ திரைப்படம் அறிவாளிகளுக்கு மட்டுமே பிடிக்கவில்லை: பாபிசிம்ஹா

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதை அடுத்து வசூலும் அடி வாங்கி உள்ளது. 
 
இந்த படத்தின் ரன்னிங் டைம் 12 நிமிடம் குறைத்தும் எந்தவிதமான பயனும் இல்லை என்றும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பெயரில் அனைத்து நெகட்டிவ் விமர்சனங்களும் வந்த பிறகு ரன்னிங் டைம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹா, இந்தியன் 2 திரைப்படம் அறிவாளிகளுக்கு மட்டும் தான் பிடிக்கவில்லை என்றும் ஒரு நல்ல விஷயத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது என்றும் அதனால் தான் வேண்டும் என்றே குறை சொல்லி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
 
அப்படிப்பட்ட அறிவாளிகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்த படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து வருகிறார்கள் என்றும் அது எங்களுக்கு போதும் என்றும் தெரிவித்துள்ளார். பாபி சிம்ஹாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva