100 கோடி ரூபாய் வசூலைக் கூட எட்டாதா இந்தியன் 2?… ஷங்கர் கேரியரின் மோசமான டிசாஸ்டர்!
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஜூலை 12 ரிலீஸானது. படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன. முக்கியமாக வழவழ என்று நீளும் நீண்ட சொற்பொழிவுக் காட்சிகள் இன்றைய ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளன.
முதல் நாளில் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் அடுத்த நாளே வசூல் படுத்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் வசூல் தொடர்சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரத்தின் வேலை நாளான திங்கள் கிழமை இந்த படத்தின் வசூல் எதிர்பாராத அளவுக்கு குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. திங்கள் கிழமை அன்று இந்திய அளவில் இந்த படம் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாம். படம் ரிலீஸாகி இதுவரை 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இந்த படம் இந்தியா முழுவதும் இந்த படம் இதுவரை 60 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாம். இதனால் இந்த படம் தன் வாழ்நாளில் 100 கோடி ரூபாய் வசூலையாவது எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.