திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (17:07 IST)

கமல் மூன்று மாதகாலம் அமெரிக்க பயணம்...பின்னணி என்ன?

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஜூலை 12 ரிலீஸானது. படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன. அதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தக்லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என தெரிகிறது. அதன் பிறகு கமல்ஹாசன் 90 நாட்கள் அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்க செல்லவுள்ளாராம்.

சமீபகாலமாக அரசியல், சினிமா என தொடர்பயணங்களில் இருந்த கமல்ஹாசன் ஒரு சிறிய ஓய்வாக அமெரிக்கா செல்ல உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க பயணத்தில் அவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI குறித்துக் கற்றுக்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.