வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (09:56 IST)

மீண்டும் முரண்டு பிடிக்கும் ஷங்கர்… இந்தியன் 2 படத்தில் இத்தனை நிமிடம்தான் குறைத்துள்ளாரா?

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

படத்தின் குறைகளில் மிக முக்கியமான ஒன்றாக சொல்லப்பட்டது படத்தின் நீளம்தான். இதனால் படத்தின் படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் குறைத்து மீண்டும் சென்சாருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படத்தில் இருந்து 11 நிமிடக் காட்சிகளை நீக்க மட்டும்தான் ஷங்கர் அனுமதி அளித்துள்ளாராம். அதனால் இந்த நேரக்குறைப்பால் படத்துக்கு நல்லது எதுவும் நடக்கப் போவதில்லை என சொல்லப்படுகிறது.

படத்தின் ரிலீஸூக்கு முன்பே கமல்ஹாசன் படத்தின் நீளம் குறித்து தனது அதிருப்தியை லைகா நிறுவனத்திடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் லைகா சொன்ன அந்த விஷயத்தை இயக்குனர் ஷங்கர் காதுகொடுத்து கேட்கவேயில்லையாம். அதே போல படக்குழுவினர் பலரும் நீளத்தைக் குறைக்க வேண்டும் என சொன்னபோதும் ஷங்கர் கேட்கவேயில்லை என சொல்லப்படுகிறது.