ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:43 IST)

ரத்த அழுத்தம்… சர்க்கரைநோய் …. சமந்தா பேட்டியின் போது கண்ணீர் விட்ட பிரபல நடிகர்

முன்னணி நடிகை சமந்தா தொகுத்து வழங்கும் ஒடிடி நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்ட ராணா. தனக்கிருந்த உடல் நலப் பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணாடகுபதி. இவர் தந்தை பிரபல தயாரிப்பாளர் ஆவார்.

இவர் நடித்த பாகுபலி படம் அனைவராலும் இவரது திறமையை அறியச் செய்தது. அதன்பின், இந்திய சினிமாவில் அனைவராகும் கவனிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அவர் மணந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை சமந்தா வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் ராணா டகுபதி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது :

நான் திரைத்துறையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எனக்குச் சிக்கல் வந்தது.
எனக்குப் பிறந்ததில் இருந்தே சில உடலில் பிரச்சனைகள் இருந்தன.

இதனால் எனக்கு ரத்த அழுத்தம், இதயத்தை சுற்றிக் கால்சியம் சேர்ந்திருந்தது. சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால் எனக்கு ரத்தக் கசிவு ஏற்ப்பட்டது. அந்தச் சமயத்தில் 70 % பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தது. அதேபோல் இறப்பதற்கும் 30% வாய்ப்புகள் இருந்ததாகவும் அவர் கண்கலங்கியபடி கூறியுள்ளார்.