ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (14:00 IST)

அவனோட ஆணுறுப்பை அறுத்து போடணும்: அறந்தாங்கி நிஷா ஆவேசம்

’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்று அதன் பின்னர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகை அறந்தாங்கி நிஷா. இவர் சமீபத்தில் அறந்தாங்கி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்த சிறுமி ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஊடகமொன்றுக்கு ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.
 
சிறுமிகளின் மீது தவறாக நடந்து கொள்பவர்களை சாதாரணமாக விடக்கூடாது என்றும் அவருடைய ஆணுறுப்பை அறுத்து போட்டால் தான் திருந்துவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆண்கள் தான் பெண்களை பாதுகாக்கின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஆண்கள் சமூகத்தை சரியாக வளர்க்க வேண்டிய பொறுப்பு தற்போது இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இது மாதிரி குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் செய்பவர்களை 10 பேரை தூக்கில் போட்டால் பதினோராவது நபருக்கு கொண்டு பயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெண் குழந்தைகளுக்கு தற்போது தான் ஓரளவு சுதந்திரம் கிடைத்து வருவதாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருவதாகவும் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்தால் மீண்டும் பெண் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கும் நிலை தான் ஏற்படும் என்றும் எனவே இந்த பிரச்சனைக்கு உடனடியாக சட்ட ரீதியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அறந்தாங்கி நிஷாவின் இந்த ஆவேசமாக பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது