திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (15:52 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அருண்.. யார் அந்த காதலி?

பிக்பாஸ் வீட்டில் இருந்து அருண் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், 18 போட்டியாளர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் மேலும் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டின்   போட்டியாளரான அருண், தனது காதலி மற்றும் கடந்த சீசனின் டைட்டில் வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிய பிறகு, வீடு மொத்தமும் அமைதியாக இருந்த வேளையில், கேமரா முன் வந்து, அர்ச்சனாவுக்கு, “நான் இங்கு நலமாக இருக்கிறேன். இந்த வாரம் கேப்டன் பதவியும் பெற்று விட்டேன். உனது பிறந்தநாள் இன்று எனக்கு நன்றாகவே தெரியும். உனது வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டாகட்டும். பிக் பாஸ் கோப்பையைத் தாங்கியபடி விரைவில் உன்னை சந்திக்கப் போகிறேன்,” என்று உணர்ச்சிமிகு வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அர்ச்சனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “என் பிறந்தநாள் நினைவுகளால் நிறைந்து விட்டது. இதற்காக நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்தேன். இந்த அற்புதமான அனுபவத்தை ஏற்படுத்திய அருணுக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

Edited by Siva