வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (14:37 IST)

திமுக கூட்டணிக்கு வாருங்கள்: கமல், ரஜினிக்கு அழைப்பு விடுத்த அரசியல் தலைவர்

திமுக கூட்டணிக்கு வாருங்கள் என கமல் ரஜினிக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கட்சிகள் தனி அணியாக இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக திமுக அணிகள் வலுவாக இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் உள்பட பல கூட்டணிகள் வரும் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிதாக கமல் ரஜினி கூட்டணியும் இணைவதால் வரும் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களுடைய கூட்டணிக்கு வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருப்பதால் அவர் திமுக கூட்டணிக்கு வாருங்கள் என்று தான் கமல் ரஜினியை அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் திமுகவில் இணைவார்களா? என்பதையும், அப்படியே கமல், ரஜினி திமுக கூட்டணிக்கு வர சம்மதித்தாலும், அவர்களை முக ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்