பிகிலே...இந்த விளையாட்டால தான் நம்மளுடைய அடையாளமே மாறப்போகுது - தெறிக்கவிட்ட ட்ரைலர்!

Papiksha| Last Updated: சனி, 12 அக்டோபர் 2019 (18:19 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 


 
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தில் சரவெடியாக வெடிக்கவுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. 2 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இந்த ட்ரைலரில் மகன் விஜய் மைக்கல் என்ற கதாபாத்திரத்திலும் அப்பா விஜய் ராயப்பன் என்ற ரவுடியாகவும் இரண்டு கேரக்டரில் வெறித்தனமாக நடித்துள்ளார் விஜய். 
 
அப்பாவின் ரவுடிசத்தால் ஃபுட் பால் பிழையாடுவதை பாதியிலேயே நிறுத்திவிட்டு மைக்கேல் பின்னர் அந்த பெண்களுக்காக கோச்சராக களத்தில் இறங்கி அடிக்கிறார்.மேலும் நயன்தாராவுடன் திருமண காட்சி ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது. "காதலுக்கு காதலுக்கு மரியாதையெல்லாம் உனக்கு மறந்தே போச்சு" "இந்த விளையாட்டால தான் நம்மளுடைய அடையாளமே மாறப்போகுது" என உணர்ச்சி வசனத்துடன் விஜய் பேசும் வசனங்களும் மாஸ் காட்டுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :