1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (16:04 IST)

ஷிவானியை யாருமே மதிக்கலையா? மூன்றே ஓட்டுகள்!

இன்று நடைபெற்ற  பிக்பாஸ் வீட்டின்அடுத்த வாரத்திற்கான கேப்டன் போட்டியில் ஷிவானிக்கு வெறும் மூன்று ஓட்டுக்கள் மட்டுமே விழுந்தது அவரது ஆர்மியினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது 
 
இந்த வார கேப்டனாக ரம்யா பாண்டியனை பிக்பாஸ் நேரடியாக தேர்வு செய்த நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பதை தேர்வு செய்ய ஓட்டு போட வேண்டும் என்று கமலஹாசன் என்று கூறுகிறார் 
 
அப்போது ஷிவானி பெயரை அவர் கூறியது 3 பேர்கள் மட்டுமே கையை தூக்கி உள்ளனர். ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தி பெயரை கூறியவுடன் 6 பேர் கையை தூக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அப்போது கமல்ஹாசன் ஓட்டு போடும்போது யோசித்து ஓட்டு போடுங்க என்றும் ஓட்டு போட்ட பின்னர் வருத்தப்படக் கூடாது என்றும் கூறுகிறார். இவ்வாறாக இன்றைய மூன்றாவது புரோமோ முடிவடைகிறது
 
இன்றைய புரோமோவில் இருந்து அனேகமாக சுரேஷ் தான் அடுத்த கேப்டன் போல் தெரிகிறது. அதேபோல் இன்றைய நிகழ்ச்சியில் ஓட்டு போடுவது குறித்து பேசி கமல் மறைமுகமாக தனது அரசியல் கருத்தையும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது