1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (12:57 IST)

ஹார்ட், ஹாட் பிரேக் பஞ்சாயத்து இன்னும் தீரலையா? 2 புரோமாவிலும் அதேதான்!

ஹார்ட், ஹாட் பிரேக் பஞ்சாயத்து இன்னும் தீரலையா?
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிறன்று தொடங்கிய நிலையில் சொந்த கதை, சோக கதை மற்றும் சக போட்டியாளர்களுக்கு ஹார்ட் மற்றும் ஹார்ட்பிரேக் குத்தும் நிகழ்வுகள் நடந்தது இதில் அதிகமாக ஹார்ட் பிரேக்குகளை வாங்கியவர் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒரு வழியாக கடந்த வாரமே இந்த டாஸ்க் முடிந்த நிலையில் தற்போது மீண்டும் அதே ஹார்ட் மற்றும் ஹார்ட் பிரேக் டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஒரே ஒரு வித்தியாசம் தற்போது கமலஹாசன் முன்னிலையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்பதும், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட்டும், பிடிக்காதவர்களுக்கு ஹார்ட் பிரேக்குகளும் போட்டியாளர்கள் குத்தி வருகின்றனர் 
 
இதனால் திரும்பத் திரும்ப ஒரே சம்பவங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்து கொண்டிருப்பது போன்று உள்ளது மட்டுமின்றி இன்று காலை முதல் வெளியான இரண்டு புரமோவிலும் அதே சம்பவங்கள் வந்து கொண்டிருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி போர் அடிப்பதாக சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்து வருகின்றன