ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (10:41 IST)

கமலின் முதல் நாள்: ஆமை வேகத்தில் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி!

கமலின் முதல் நாள்: ஆமை வேகத்தில் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று ஆரம்பித்த நிலையில் முதல் நாளில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அறந்தாங்கி நிஷாவின் அரட்டை, அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தியின் மோத, ரேகா மற்றும் சனம் ஷெட்டியின் மோதல் ஆகியவை சுவராசியமாக இருந்தது 
 
மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது சொந்த கதை சோக கதையையும் இடையிடையே கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய புரமோவில் கமல்ஹாசன் அதிரடியாக அறிமுகமாகி ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார் 
 
ஆனால் புரமோவில் கூறியபடி அவர் நிகழ்ச்சியின்போது எதையும் செய்யவில்லை என்பதும் வழக்கம்போல் ‘நான்’ என்ற சுயபுராணம் பாடியதை தவிர வேறு எதையும் அவர் உருப்படியாக செய்யவில்லை என்றும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டினர்
 
அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி சண்டைக்கும், சனம்ஷெட்டி மற்றும் பாலாஜி, சம்யுக்தா பிரச்சனைக்கும் அவர் எந்த தீர்வையும் கொடுக்காமல் இருந்தது பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
 
மொத்தத்தில் நேற்றைய கமல்ஹாசனின் முதல் நாள் நிகழ்ச்சி வழக்கத்தை விட மெதுவாக  சென்றதால் சுவராசியம் இன்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது