புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (15:41 IST)

கொஞ்சம் விட்டா அடிச்சுக்குவாங்க போல... ஆரியுடன் வீண் வம்பு இழுக்கும் பாலா!

பிக்பாஸ் வீட்டில் இன்று ஆரி மற்றும் பாலாஜிக்கு இடையில் வாக்குவாதம் முற்றி இருவரும் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். ஆரி பாலாவை பார்த்து வீட்டில் குப்பைகளை கூட்ட மாட்டேங்குறான் சோம்பேறி என்று கூறிவிட்டார்.
 
அவ்ளோவ் தான்... சந்திரமுகியாக மாறிய பாலாவை பார்க்கணுமே.... கூட்ட முடியாது. இன்னொரு வாட்டி சோம்பேறின்னு சொன்னீங்கன்னா அவ்ளோவ் தாண்டா உனக்கு என கடுமையாக திட்டி கோபப்பட்டுள்ளார். ஏற்கனவே பாலா அடாவடி , அராஜகம் வீட்டில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இடையில் அவரது நண்பர் வேறு வந்து உசுப்பேத்தி விட்டுட்டு போய்விட்டார். இருக்கட்டும் இதுவும் நல்லதுக்காகவே தான். இப்போ தான் ஆரியின் நல்ல குணம் எல்லோருக்கும் தெரியவரும்.
 
அவர் டைட்டில் கார்ட் வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது. என்ன நடந்தாலும் அது ஆரிக்கு சாதகமாகவே நடக்கட்டும் என ஆடியன்ஸ் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் பாலாவை தொடர்ந்து ஆரியுவுடன் ரியோ சண்டையிடுகிறார்.
 
அதாவது, பாலாவுடன் சண்டையிட்டதற்கு ஆரிக்கு பஞ்சாயத்து பண்ண ரியோ " என்ன கூப்பிட்டு எத்தனை விஷயங்கள் நீங்க சொல்லியிருக்கீங்க? அதெல்லாம் என் மேல் இருக்கும் அக்கரையில் சொல்றீங்க ன்று மதித்துள்ளேன். ஆனால், நீங்கள் நான் நல்லதாக சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தில் இல்லை என வாய்க்கு வந்தபடி திட்டி விட்டார்.
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் ஆரி நாமினேஷன் போது பாலாவை குறித்து காதல் கண்கட்டுது என்று சொன்னதை இப்போ மனதில் வைத்து ஆரியை பழிவாங்குகிறார் பாலா. இந்த ப்ரோமோவிலும் தொடர்ந்து சண்டை தான் போட்டுக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு சண்ட நடந்தாலும் ரியோவும் சோமும் விளக்கி விட வர மாட்றாங்க. உங்களுக்கு என அவ்வளவு சந்தோஷம்...?