ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (07:13 IST)

பீஷ்மர் ரஞ்சித்தா? கவுண்டம்பாளையம் ரஞ்சித்தா?... ஒரிஜினல் யார்? –விஜய் சேதுபதி நச் கேள்வி!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நேற்று தொடங்கியது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அதில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனால் கமலஹாசன் இடத்தை விஜய் சேதுபதியால் நிரப்ப முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் முதல் நாளிலேயே தன் ஸ்டைலில் பதில் சொல்லிவிட்டார் விஜய் சேதுபதி. போட்டியாளர்களை வரவேற்கும் போதே தன் ஸ்டைலில் நக்கலாகப் பேசி அனைவரையும் கலகலப்பாக்கினார். போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே சென்றுள்ள நடிகரும்  இயக்குனருமான ரஞ்சித்திடம் அவரின் உரையாடல் நேற்றைய ஹைலைட்டாக அமைந்தது.

வி. சே : நீங்க ஒரு படம் இயக்குனீங்கள்ல சார்?
ரஞ்சித் : கவுண்டம்பாளையம்
வி சே : அது இல்ல சார்.. பீஷ்மர். அந்த படத்துல உங்க கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். ஆனா கவுண்டம்பாளையம் படம் இயக்குனதுக்கு அப்புறம் நீங்க மாறிட்டீங்கள்ல சார். இதுல எது ஒரிஜினல் சார்?
ரஞ்சித் : நான் என் தப்ப உணர்ந்துட்டேன் சார்.

கவுண்டம்பாளையம் படத்தின் ப்ரமோஷன்களில் ரஞ்சித் ஆணவக்கொலை நியாயப்படுத்தி எல்லாம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் குறிப்பிட்டுதான் விஜய் சேதுபதி அவரிடம் இந்த கேள்விகளைக் கேட்டுள்ளார் என ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.