திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:24 IST)

திருமணம் எப்போது? ரம்யா பாண்டியன் கூறிய புதிய தகவல்!

Ramya
ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளங்களில் பதில் அளித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் குறித்த கேள்விக்கு சுவராசியமான பதிலை அளித்துள்ளார் 
 
திருமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், ‘நான் விரும்பும் ஒருவரை இன்னும் பார்க்கவில்லை என்றும் அப்படியே பார்த்தாலும் அவருக்கு என்னை பிடிக்கவேண்டும் என்றும் அதனால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தற்போது சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் சரியான நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது