திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (13:38 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மைனாவின் சம்பளம் எவ்வளவு?

myna
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று இரவு திடீரென மைனா வெளியேறிய நிலையில்  அவருக்கான சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 
 
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு விக்ரமன், ஷிவின், அசீம் மற்றும் மைனா ஆகிய நான்கு பேர் தகுதி பெற்றிருந்தனர் 
 
இந்த நிலையில் நேற்று திடீரென மிட் வீக் எ எவிக்சனாக மைனா வெளியேற்றம் செய்யப்படுவதாக பிக் பாஸ் தெரிவித்தார். இதனை அடுத்து அவர் நேற்று இரவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் 103 நாட்கள் மைனா இருந்த நிலையில் அவருக்கு தினசரி சம்பளம் 25 ஆயிரம் என்றும் இதனால் அவருடைய மொத்த சம்பளம் 25.75 லட்சம் என்றும் கூறப்படுகிறது. பணப்பெட்டியை அவர் எடுத்திருந்தால் கூடுதல் பணம் அவருக்கு கிடைக்கும் கிடைத்திருக்கும் என்றும் அதை மிஸ் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran