1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (19:20 IST)

நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லனு சொல்லனும்: நடிகர் கமல்ஹாசன்

kamal
நன்றாக இருக்கும் படத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வதுபோல் நன்றாக இல்லாத படத்தை நன்றாக இல்லை என்று சொல்ல வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் 
 
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிலையில் இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
 
 இந்த விழாவில் அவர் பேசியபோது ஒரு படம் நன்றாக இருக்கிற படத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதேபோல் நன்றாக இல்லாத படத்தை நன்றாக இல்லை என்று தைரியமாக சொல்ல வேண்டும். அது எத்தனை கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, அதை ரசிகர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். ரசனையை வளர்ப்பது நமது கடமை என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் வெற்றியடைய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்
 
இதனை அடுத்து பேசிய இயக்குனர் பிரபுசாலமன் நடிகர் அஸ்வின் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். இந்த படம் அஸ்வினை ஒரு சரியான தளத்திற்கு கொண்டு போகும் என்று நினைக்கிறேன். ஒரு கலைஞனை உருவாக்கிய நடிகராக கமல் இருக்கிறார். அவர்களைப் பற்றி பேச வார்த்தையே இல்லை மிக்க நன்றி என்று தெரிவித்தார்
 
Edited by Mahendran