திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2019 (12:59 IST)

நா போகல...எப்படி இது நடந்தது? விஜய் டிவியின் பித்தலாட்டம் - வீடியோ வெளியிட்ட மதுமிதா கணவர்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை கோலாகலமாக முடிவடைந்தது. அதில் முகின் டைட்டில் வின்னர் வென்று ரூ. 50 லட்சம் பரிசு தொகையாக பெற்று சென்றார். சாண்டி இரண்டாம் இடமும், லொஸ்லியா மூன்றாம் இடமும் பெற்றார். 


 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 17 போட்டியாளர்களுள் சரவணன் மற்றும் மதுமிதாவை தவிர மற்ற அனைவரும்  கிராண்ட் ஃபைனலில் பங்கேற்றனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் மோசஸ் பங்கேற்றது போல் வீடியோவை சித்தரித்து விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்த மோசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் " omg நா நான் போகவே இல்லை ஆனால், எப்படி இது நடந்தது????? என்று கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
விஜய் டிவியின் இந்த செயலை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வைரலாகியுள்ளனர்.