1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (20:22 IST)

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முதல் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிக்பாஸ் பாலாஜி நடிக்கும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
 
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ் என்பதும் அவர் கடந்த சில மாதங்களாக திரைப்பட வாய்ப்புகளை தேடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ரவீந்திரன் அவர்களின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் பாலாஜி முருகதாஸ் நடிக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கவே பிக் பாஸ் பிரபலம் கவின் நடித்த ‘லிப்ட்’ படத்தை அவர்தான் தயாரித்தார் என்பதும் அதேபோல் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிக்கும் படத்தையும் அவர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் பாலாஜி நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் முழு விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது