ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் செண்ட்ராயன் - புதிய ப்ரோமோ வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியன் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் தாடி பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, ஜனனி உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ ஏற்கனேவே வெளியடப்பட்டது. அதில், பொன்னம்பலத்தின் பேச்சு தங்களுக்குப் பிடிக்கவில்லை என பெண் போட்டியாளர்கள் கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றது.
இந்நிலையில், 2வது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், செண்ட்ராயன் ஆங்கிலம் கற்றுக்கொண்டு கமலிடம் பேசவுள்ளேன் என கூறுகிறார். இதன்பின்னர் வைஷ்ணவி செண்ட்ராயனுக்கு இங்கிலிஷ் கற்றுக் கொடுக்கிறார். இதைக் கண்ட ஹவுஸ்மேட்ஸ் சிரித்து மகிழ்கின்றனர்.