வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (13:15 IST)

ஹவுஸ்மேட்டுடன் சண்டைபோடும் நித்யா: புலம்பும் பாலாஜி

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் புரோமோ ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜிற்கும், நித்யாவிற்கும் மீண்டும் சமையல் குறித்து தகராறு ஏற்படுகிறது. இதையடுத்து, மமதி, நித்யாவிடம் உங்கள பார்த்த கஷ்டமா இருக்கு என்று கூறுகிறார். இதற்கு நித்யா உங்களை பார்த்தாலும் எனக்கு கஷ்டமா இருக்கு என பதிலளிக்கிறார். இதனால் மமதி உதவ வந்ததக்கு மன்னித்து விடுங்கள் என கூறினார். ஹவுஸ்மேட் அனைவருடனும் நித்யா சண்டை போட்டு கேட்ட பெயர் வாங்குவதாக பாலாஜி, டேனியிடம் புலம்புகிறார்.