செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:12 IST)

விஜய் டிவி சீரியலில் வனிதாவா..? கண்டிப்பா வில்லி ரோல் தான் இருக்கும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியாளர்களுக்கு லாட்டரி அடித்தாற்போல் பணம் , பேர், புகழ் என அத்தனையும் வந்து சேரும். இதில் கொஞ்சம் வித்யாசமாக மக்களின் வெறுப்புகளால் பிரபலமான போட்டியாளர் வனிதா. பிக்பாஸில் பங்கேற்று ஆரம்பத்தில் தனது நடிவடிக்கைகளால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த இவர் போக போக நற்பெயரை பெற்றார். 


 
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் வனிதா நடிக்கப்போவதாக சில நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் இந்த சீரியலில் ஒரு வேலை வனிதா நடிக்க வந்தால் நிச்சயம் அது வில்லி ரோல் ஆகத்தான் இருக்கும். 
 
அப்படி மட்டும் நடந்துவிட்டால் தொடரின் சுவாரஸ்யமும் விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியும் ஒரே அடியாக எகிறிவிடும். மேலும் வில்லி கதாபாத்திரம் வனிதாவுக்கு கட்சிதமாக பொருந்தும். எனவே கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.