வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (16:49 IST)

பிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர்தான்!

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 
 
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸில் வருவதற்கு முன்னரே வைஷ்ணவி விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வந்தார். 
 
ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் அஞ்சனும், வைஷ்ணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததோடு லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை நேற்று திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி. 

மிகவும் எளிமையான முறையில் காதலித்தவரை திருமணம் செய்துகொண்ட வைஷ்ணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்த்து வருகிறது.