ஹரிஷிடம் கூச்சம் இல்லாமல் ரைசா கேட்ட கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரைசா வில்சன். சப்போர்டிங் ரோலில் நடித்து வந்த ரைசா, முதல் முறையாக ஹீரோயினாக பியார் பிரேமா காதல் படம் மூலம் அறிமுகமானார்.
யுவன் தயாரித்த அந்த படத்தில் அவர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ரைசா-ஹரிஷ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றதால் இருவரும் நண்பர்களாக மாறினர்..
இந்நிலையில் தற்போது இருவரும் ஸ்ருதி ஹாசன் நடத்தி வரும் ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது "ரைசா சிங்கிளா இல்லை கமிட்டட்-ஆ?" என ஸ்ருதி கேள்வி கேட்க "அவர் சிங்கிள் தான்" என ஹரிஷ் பதில் அளித்தார்.
"ரைசா என்னிடம் வந்து கூச்சமே இல்லாமல் 'எனக்கு ஒரு பாய் பிரெண்டு வேண்டும்! உன் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?' என கேட்டார்" என நிகழ்ச்சியில் கூறி கலகலப்பு ஏற்படுத்தினார் ஹரிஷ் கல்யாண்.