வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (15:19 IST)

நீதான் நர்ஸ்'ஏ இல்லையே... அப்புறம் எதுக்கு இந்த வெட்டி பந்தா - ஜூலியை விளாசும் நெட்டிசன்ஸ்!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்  சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.  அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

அந்த வகையில் இன்று (மே 12) உலக செவிலியர் தினத்திற்கு ட்விட்டரில் நர்ஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் ஜூலி. இதனை கண்ட இணையவாசிகள்  "நீ தான் நர்ஸ் வேலைய விட்டு சினிமாவுல இறங்கிட்டியே அப்புறம் எதுக்கு இப்போ இந்த பழைய போட்டோவ போட்டு பீத்திக்கிட்டு இருக்க என்றெல்லாம் கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் ஜூலிக்கு ஆதரவாக வேலைய விட்டுட்டா என்ன வாழ்த்து சொல்ல கூட தகுதி இல்லையா...? என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.