வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (13:20 IST)

பள்ளி பருவமொட்டாக காஜல் பசுபதி... இணையத்தில் வைரலாகும் குரூப் போட்டோ!

சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் வீடியோ தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்து பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் காஜல் பசுபதி. நடன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது நடன கலைஞர் சாண்டிக்கும், காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதையடுத்து சாண்டி சில்வியா என்பவரை மறுமணம் செய்துகொண்டு லாலா என்ற பெண் குழந்தைக்கு அப்பவனார். இது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை வெளியிட்டு " இதில் நான் எங்கு இருக்கிறேன்னு உங்களால் கண்டுபிடிக்க முடியுதா..? என கேள்வி கேட்டுள்ளார். முதல் வரிசையில் இரண்டாவது  இடத்தில் அமர்ந்திருக்கும் காஜல் அப்போதே பப்ளியாக இருந்துள்ளார்.  இதனை காஜல் ரசிகர்கள் கண்டுபிடித்து அடையாளம் காட்டி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#tenthclassmemories