திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:59 IST)

நான் சிரித்தால் வெற்றி – பிக்பாஸ் ஜூலிக்கு திருப்புமுனையாக அமையுமா ?

நான் சிரித்தால் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் ஜூலி படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘யார்றா இந்த பொன்னு?’ என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ‘என்னடா இந்த பொன்னு?’ என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி.

அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. இந்நிலையில் நான் சிரித்தால் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். கடந்த வாரம் அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஜூலி ‘ இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்துக்காக பலரும் என்னைப் பாராட்டினர். இது எனது முதல் வெற்றி. ஒரு குடும்பத்தின் வெற்றி. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சின்ன கஷ்டத்தைக் கூட கொடுக்காமல் என்னைப் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். ’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். இந்த வெற்றியின் மூலமாவது அவர் மீதுள்ள நெகட்டிவ் இமேஜ் மறைந்து திருப்புமுனையாக எதாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.