வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (20:33 IST)

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்: கமல் வரவேற்பு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டசபையில் தமிழ் பண்டிதர் அயோத்திதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் 
 
இந்த அறிவிப்புக்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிந்த நேரம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார் .அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
 
ஒவ்வொரு தமிழரும் அறிந்துகொள்ள வேண்டிய முன்னோடிச் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை மநீம வரவேற்கிறது.
 
 அயோத்தி தாசர் மணிமண்டபம் என்பதை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்று உள்ளனர் என்பது என்பதால் விரைவில் இந்த மணிமண்டபம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது