செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (14:46 IST)

குறும்படம் இருக்கா...? பரபரப்பான பிக்பாஸ் ப்ரோமோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்கள் என்றாலே சுவாரஸ்யம் கொஞ்சம் வழக்கத்தை விட அதிகமாகிவிடும். காரணம், வாரம் முழுக்க வீட்டில் நடந்த சண்டை, வாக்கு வாதம் அத்தனையும் பஞ்சாயத்து பண்ணி தீர்த்து வைக்க கமல் ஹாசன் வந்திடுவார்.

இதற்காக இன்று காலை 9 மணி முதல் முதல் ப்ரோமோவிற்காக காத்திருந்த மக்கள் இந்த மொக்க ப்ரோமோவை கண்டு வெறுப்பாகி விட்டனர். ஸ்டைலிஷான தோற்றத்தில் கெத்தாக நடந்து வந்த கமல் ஹாசன் ஒரு டயலாக் கூட பேசாமல் இப்படி மொக்க ப்ரோமோவை வெளியிட்டுட்டாங்களே என அப்செட் ஆகிவிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆரி, நிஷா, ரியோ, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் ,மக்களின் பேராதரவை பெற்றுள்ளனர். இதில் சுரேஷ் - சக்ரவர்த்தி அனிதாவுக்கு இடையே நடந்த சண்டையை குறித்து பேசப்போகும் கமல் நிச்சயம் அதற்கான குறும்படத்தை போட்டுக்காட்டுவார் என எதிர்பார்க்கலாம். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..