ஆரி பயத்தை கொடுக்கிறார்... புலம்பித்தள்ளும் ரியோ!

Papiksha Joseph| Last Modified திங்கள், 4 ஜனவரி 2021 (13:52 IST)

பிக்பாஸ் வீட்டில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமாகியுள்ளது. இதில் முதல் ஆளாக ஆரி ரியோவை நாமினேட் செய்தார். அதற்கான காரணத்தை கூறிய அவர். நானும் பாலாவும் சண்டையிட்டு கொள்ளும்போது மூக்கை நுழைத்து விளக்கம் சொன்னார். ஆனால், அதில் எனக்கு திருப்தி இல்லை என கூறினார்.
உடனே சோம் வந்து, ஆரி என்ன இருந்தாலும் அப்படி பேசியிருக்கக்கூடாது. இங்கமட்டுமில்ல வெளியில் சென்றால் கூட இப்படி பேசக்கூடாது என கூறி என அட்வைஸ் கொடுத்தார். எனக்கு தெரிஞ்சு இப்போ தான் சோம் வாயை துறந்து பேசியிருக்கிறார். அதையடுத்து ரியோ ஆரியை நாமினேட் செய்துவிட்டு நீ ரூல்ஸை மதிக்கிறேன் என்பதை காட்ட என்னை கெட்டவனாக மாற்றிவிடாதே என கூறி வழக்கம் போலவே ஆரி ஆர்மிக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். பெரிய தலைகள் தங்களுக்குள் சண்டை போடுவதால் .....சின்ன தலைகள் எவிக்ஷனுக்கு போகாமல் தப்பித்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.
இரண்டாவது ப்ரோமோவில் ரியோ கேபியிடம் ஆரி தன்னை பயமுறுத்துவதாக பயந்துக்கொண்டே கூறுகிறார். எல்லாரும் ஒண்ணா சேர்ந்து விளையாடும் இடத்தில் நீங்க சேரவே இல்லை என்று தான் சொன்னேன். அவரது குழந்தை வந்தபோது கூட அவளிடம் அவ்வளவு பாசமாக இருந்தேன். ஆனால், இப்போது வெறுப்பு ஆகிடுச்சு என கூறி வேஷம் போடுகிறார். பாசம் வேசமா இருக்க வேண்டாம் மிஸ்டர் ரியோ. அதுக்கு நீங்க பாலா மாதிரி எதிரியாகவே இருந்தால் நல்ல பெயராவது கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :