ஆரியை பார்த்து பெருமைப்படும் மனைவி நதியா - மகளுடன் இப்போ பிக்பாஸ் வீட்டில்....
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்ப உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்தவகையில் ஷிவானியின் அம்மா , பாலாஜியின் நண்பர் உள்ளிட்டவர்களை தொடர்ந்து இன்று கேபியின் அம்மா வந்துள்ளார்.
அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் கேபியை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார் . அதையடுத்து ஆரியிடம் சென்று உங்களை நெடுஞ்சாலை படத்தின் போதே சந்தித்திருக்கிறேன் எனக்கூறி அவரிடம் பேசினார். பின்னர் கேபியின் தவறுகளை சுட்டிக்காட்டினார்.
அதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆஜீத்தின் குடும்பத்தார் அவரை சந்திக்க வந்துள்ளனர். அஜீத்தை பற்றி நாம் எல்லோரும் நினைக்கும் அதே கருத்தை தான் அவரது தாயும் முன் வைக்கிறார். அதாவது, யாரிடமும் பேசாமல் இருப்பது.
இந்நிலையில் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்த ஆரியின் மனைவி மற்றும் மகள் பிக்பாஸ் வீட்டில் வந்துள்ளனர். அவரது மனைவி நதியா ஆரியின் செயல்களையும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துக்கொள்ளும் விதத்தையும் பார்த்து ஒரு மனைவியாக மிகவும் பெருமைப்படுகிறார் . இதோ அந்த வீடியோ...