செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (11:26 IST)

ஆணியே புடுங்க முடியாது... ஆரியை காலி பண்ண அனிதாவை கைக்குள் போட்ட அர்ச்சனா...!

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த கோழி-நரி டாஸ்கில் யார் யார் எப்படி விளையாடினார்கள், யார் பெஸ்ட் பெர்பார்மென்ஸ், யார் ஒர்ஸ்ட் பெர்பார்மென்ஸ் என்பது குறித்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். 
 
இதில் நேற்று சோம் மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே வெடித்த சண்டை நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை தூண்டியது. இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமவில் இது குறித்து கூறிய அர்ச்சனா சோம் மற்றும் ரம்யாவை நாமினேட் செய்து அவர் என்னதான் என் முட்டையை உடைத்து என்னை கடுப்பேற்றியிருந்தாலும் நரியா இருக்கும் போது நரியா இருந்த சோம் கோழியாக இருக்கும் போது கண்றாவியாக இருந்தார் எனக்கூறிவிட்டார். 
 
அதையடுத்து ஷிவானி ரூல்ஸை பிரேக் பண்ணாமல் விளையாடியதாக கூறி அவரை பாராட்டினார் பாலாஜி. இந்த முறையும் எப்போதும் போலவே ஆரியை தான் ஜெயிலுக்கு அனுப்புவாங்க. ஒரு கூட்டம் ஆரியை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் தன் நிலை மாறது கௌரவமான வார்த்தைகளை பயன்படுத்தும் ஆரியை ஆடியன்ஸ் கௌரவப்படுத்தி அவருக்கு ஓட்டளித்து டைட்டில் வெல்ல உதவி செய்து வருகின்றனர். ''
 
என்னதான் விளையாட்டு என்றாலும் ஆரி மீது தனிமனித தாக்குதல் (மானஸ்தன் போன்ற வார்த்தைகள்) நடத்தும் ரம்யா மற்றும் அர்ச்சனாவை கமல் இந்த வாரம் கண்டித்தே ஆகவேண்டும். மேலும், அர்ச்சனாவின் அன்பு எனும் மாயப்பொறியில் அனிதா மெள்ள சிக்குவது போல் தெரிகிறது. ரம்யாவும் , அர்ச்சனாவும் இனி அனிதாவை கருவியாகக் கொண்டு ஆரியை வீழ்த்த திட்டமிடக்கூடும். அர்ச்சனாவின் பப்பெட்டாக இருந்த சோம் கொஞ்சம் விழித்துக்கொண்டது போல அவரது ஆட்டம் உள்ளது.