1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (20:16 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சி- சிவகார்த்திகேயன் அதிரடி பதில்!

'சீமராஜா' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது.

 
இதனை முன்னிட்டு பட விளம்பரத்துக்காக பல வேலைகளை சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தனியார் யூடியூப் சேனலுக்கு சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார். அப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆங்கராக பணிபுரியும் படி கேட்டால், நான் மாட்டேன் என்றுதான் சொல்வேன். கிட்டதட்ட ஆறு வருடங்கள் ஆங்கராக இருந்துவிட்டேன்.
 
இப்போது நடிப்பில் மட்டுமே என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். இன்னும் நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார்.