திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (17:26 IST)

குருர்ர்ர்ர்ரூ நாதா... நீ ரொம்ப மோசமான ஆளா இருப்ப போல ...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை குறித்தும், கற்றுக்கொண்ட பாடங்களை குறித்தும் போட்டியாளர்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றனர். இன்று பிக்பாஸ் வீட்டில் விஜய் டிவி பிரபலங்களான ப்ரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் , பாலாஜி உள்ளிட்டோர் வந்துள்ளனர். 


 
அவர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடன் பிக்பாஸில் ஏற்பட்ட அனுபவங்ககளை குறித்து கேட்கின்றனர். அப்போது சாண்டி, நீங்கள் யார் என்பதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விருப்பப்பட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்தகொள்ள முடியும். அப்போது தான் நீங்கள் யார் என்பதை உங்களால் உணர முடியும். நானெல்லாம் அழுவேன் என தெரியாது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் அது நடந்தது. என்னுடைய இன்னொரு முகம் என்னவென்று எனக்கு தெரிந்தது. 
 
மேலும் சண்டை வரும்போது ஒதுங்கியிருந்து ரசித்து வேடிக்கை பார்ப்பேன் என கூறி சிரித்தார். இதை கண்ட நெட்டிசன்ஸ் உன் கதையெல்லாம் கேக்கணும்னு எங்க தலையில் எழுதியிருக்கு பாரு... பிக்பாஸ்..! உருப்படியா எதா டாஸ்க் கொடுப்பியா.. அதைவிட்டுட்டு இப்படி மொக்க ப்ரோமோவை போட்டு கடுப்பு எதுறிங்களே..! என புலம்பி வருகின்றனர்.