திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (13:43 IST)

வேணாம்டா தம்பி... உன்னையும் பேக்அப் பண்ணிடுவாங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து நேற்றுடன் 100-வது நாள் முடிவடைந்தது. வழக்கப்படி 100 நாட்கள் என்று கூறி ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்ச்சியில் குறித்த கால வரையறைக்குள் முடிக்க முடியாததால் ஒரு சில நாட்கள் நீடிக்கிறது. 


 
அந்தவகையில் 101 வது நாளான இன்று வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், வீட்டில் இதுவரை நடந்த இனிமையான சில தருணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் வீட்டிலிருக்கும் போட்டோக்களை பார்த்து முகன் சாண்டிக்கு நன்றி சொல்கிறார். 
 
இவ்வளவு மகிழ்ச்சியான நாட்களை சம்பாதிப்பதற்கு நீங்கள் தான் ஒரு தூணாக இருந்தீர்கள். மகிழ்ச்சியை மொத்தமாக கொடுக்கும் சாண்டி அண்ணனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இவர்களுடன் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மோகன் வைத்தியா, ரேஷ்மா, மீரா மிதுன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். 
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் " தம்பி போதும்டா...ரொம்பா யோசிக்காதே...எப்படியும் உன்னை வெறுங்கையுடன்  அனுப்பப்போறாங்க....என கூறி முகினை உஷார் படுத்தி வருகின்றனர்.