மக்கள் மனச நல்ல புரிஞ்சுகிட்டு காதல் ஜோடியை பிரித்து மேயும் கஸ்தூரி!

Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (13:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவில் கஸ்தூரி சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் அமர்ந்துகொண்டு வில்லு பாட்டு பாடுகிறார். அதிலும் கவினை பங்கமாக கலாய்த்து முக்கோண காதலுக்கு கட்டம் காட்டுகிறார். 

 
பத்தவச்சுட்டியே பரட்ட அப்டின்னு பத்த வைக்குறதுக்காகவே பிக்பாஸ் வீட்டினுள் வைல்ட் கார்ட் மூலமாக நுழைந்துள்ளார் கஸ்தூரி. கவினுக்கு பேருல வின் இருந்தாலும் மனசுமுழுக்க லாஸ்ஸத்தான் விரும்புது..எல்லாரும் லொஸ்லியாவுக்கு ஒரு ஓஹோ.. போடுங்கள் என்று கூறி உண்மையை போட்டு உடைக்கிறார். 
 
உடனே பக்கத்தில் அமர்ந்திருந்த சாக்ஷியால் இதை ஜீரணிக்க முடியாமல் அமைதியாக முறைக்கிறார்.... எனவே கூடிய விரைவில் இந்த முக்கோண காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாடக காதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திடுவார் கஸ்தூரி. 
 
இந்த ப்ரோமோ விடியோவை கண்ட நெட்டிசன்ஸ் இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் கடைசில கவின் கஸ்தூரியை காதலிக்குறேன்னு சொல்லிடப்போறான் பத்திரமா இருங்க என்று கலாய்த்து வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :