வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (21:25 IST)

பிக்பாஸ் 2 ஒளிபரப்பு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் தேதி ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகாக இதுவரை 2 புரமோஷன் வீடியோக்கள் வெளியாகயுள்ளது.
 
இந்நிலையில், வருகிற ஜூன் 17ம் தேதி முதல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பரத் மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்குபெறுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.