1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (11:17 IST)

அரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா! அதுவும் எங்க தெரியுமா?

வாலி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் காமெடியனாக நடித்தவர் தாடி பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக அவர் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டார்.


 
கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மாறியது. ஒரு சில வாரங்களே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தார் நித்யா. தினமும் காலையில் குட்மார்னிங் சொன்னது மூலம் அவரது மகள் போஷிகாவும் பிரபலமானார். 
 
பிறகு நித்யா வந்த சிலவாரங்களிலேயே வெளியேற பாலாஜி கடைசிக்கு முன் வரை இருந்து வெளியேறினார். கருத்துவேறுபாட்டால் அடிக்கடி சண்டையிட்டு கொள்ளும் அவர்களை இந்நிகழ்ச்சியின் மூலம் சேர்த்து வைக்க எண்ணி தான்  விஜய் டிவி அவர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது. ஆனால் அவர்கள் பிக் பாஸை விட்டு வெளியேறிய பின்னரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். 


 
இந்த நிலையில் தற்போது நித்யா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாராம் அதும் தமிழ்நாட்டில் இல்லை டெல்லியில், இதுகுறித்து பேசிய நித்யா ‘ காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால், நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில போட்டியிட்டாலும் அங்க போய் என்னை பற்றி பாலாஜி ஏதாவது அவதூறு பரப்ப திட்டம் போட்டுவிடுவார். அதனால் அவருக்கு பயந்துதான் தற்போது டெல்லியில் போட்டியிடுகிறேன்’ என்று கூறியுள்ளார் நித்யா.