பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டுத் தற்கொலை !

jayasree
Sinoj| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2021 (16:09 IST)
 

கன்னட மொழியில் பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சுஷாந்த், சித்ரா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கன்னட மொழியில் பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நடிகை ஜெயஸ்ரீ ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக அவர் பெங்களூரில் உள்ள சந்தியா கிரனா ஆஷ்ரமத்தில் தங்கி சிகிச்சை எடுத்து வந்ததாகவும் தகவல் வெளியாகிறது.

அவரது மரணம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :