செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 மே 2021 (08:02 IST)

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் உறவினர்… வெளிநாட்டில் கைது!

நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸி டொமினிக்கன் குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடியவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீரவ் மோடி. கடந்த 2018 ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்து வந்தது. இதுகுறித்த வழக்கும் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தான் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு வெற்றியாக அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீரவ் மோடி மேல் முறையீடு செய்ய முயற்சி செய்து வருகிறார்.

இதே போல நீரவ் மோடியின் மாமாவான மெகுல் சோக்ஸியும் வங்கி மோசடியில் ஈடுபட்டு ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவருக்கு குடியுரிமை இருந்ததால் அதை ரத்து செய்து இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் ஆண்டிகுவாவில் இருந்து தப்பித்து டொமினிகா என்ற சிறு தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இண்டர்போல் உதவியுடன் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் 48 மணிநேரத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என சொல்லப்படுகிறது.