1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (07:46 IST)

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது அதில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார் என்பதும் அவர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 60 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தான் சபாநாயகர் அப்பாவு அவர்கள் அறையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவர்கள் தகவலின் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva