செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (15:06 IST)

பிரதமரை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்: இளையராஜா

Ilaiayraja
பிரதமரை பார்த்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன் என இசைஞானி இளையராஜா அவர்கள் பேசியுள்ளார். 
 
வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கம் விழா நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார் என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்த விழாவில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நடைபெற்ற நிலையில் அவர் பிரதமரை பார்த்து வியந்து பேசினார். பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன் என்று கூறிய அவர் பெருமை மிகுந்த இந்த காசி நகரில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார் 
 
மேலும் காசி நகரத்தில் பாரதியார் இரண்டு வருடம் இருந்திருக்கின்றார். அவர் இங்கே கற்றுக்கொண்ட விஷயங்களை தனது பாடல்களில் குறிப்பிட்டு இருக்கின்றார் என்றும் இளையராஜா பேசினார்.
 
Edited by Mahendran